இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. முதல் போட்டியை போல, இரண்டாவது போட்டியிலும் இந்தியா சிறப்பாக விளையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் சிறிது சறுக்கியது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில், 45 ரன்களை எடுத்த 4 விக்கெட்டுகளை இழந்து நேற்றைய தினம் இந்தியா தடுமாறியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், 100 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில், கையில் 6 விக்கெட்டுகளுடன் இந்தியா களமிறங்கியது. அக்சர் படேல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இன்று ஆட்டத்தை தொடங்கிய நிலையில், உனத்கட் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பண்ட், அக்சர் படேலும் ஆட்டமிழக்க 74 ரன்களுக்கு இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் - அஸ்வின் ஜோடி வங்கதேசத்தின் சூழலை சாமர்த்தியமாக சந்தித்து, ரன்களை திரட்டியது. தொடர்ந்து, ஒரு கட்டத்தில் பாதுகாப்பான ரன்கள் வந்த உடன் இருவரும் பவுண்டரிகளை குவிக்க தொடங்கினர். ஏறத்தாழ 17 ஓவர்கள் தாக்குபிடித்து ஆடிய இந்த ஜோடி, இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துசென்றது. இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


மேலும் படிக்க | போய்ட்டு வாங்க கேப்டன்... இனி உங்களுக்கு வாய்ப்பில்லை! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு; இதுதான் காரணம்


இந்த வெற்றி மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் ரேஸில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 120 புள்ளிகள், 76.92 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 99 புள்ளிகளுடன் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம், இறுதிப்போட்டி முன்னர் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடரும் தற்போது கவனத்தை பெற்றுள்ளது. 



மொத்தம் 4 போட்டிகள் கொண்ட அந்த தொடரில், 1 போட்டியில் மட்டும் தோற்று, இந்தியா 3 போட்டிகளில் வென்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 


இது ஒருபுறம் இருக்க, ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்கும், தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது. புஜாராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டதற்கு இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. புஜாரா முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் 90, 110 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், இரண்டாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 24, 6 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 


ஆனால், ஷ்ரேயஸ் ஐயர் விளையாடிய மூன்று இன்னிங்ஸில் 2 அரைசதம் மட்டுமில்லாமல், இக்காட்டான சூழலில் இன்று இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டு போட்டியையும் தொடரையும் வென்றுக்கொடுத்துள்ளார். எனவே, நியாயமாக ஷ்ரேயஸ் ஐயருக்குதான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க | மைதானத்தில் கோபமடைந்த விராட் கோலி! என்ன செய்தார் என்று பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ