சிவனின் திரிசூலம், பிறை நிலா வடிவில் உருவாகும் வாரணாசி கிரிக்கெட் மைதானம்
வாரணாசியில் புதிதாக உருவாகும் கிரிக்கெட் மைதானம் சிவனின் திரிசூலம் மற்றும் பிறை நிலா வடிவில் கட்டப்பட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, இந்தியாவின் மிகப் பிரபலமான புனித தலங்கள் அமைந்திருக்கும் ஊர். இது பிரமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியும் கூட. இப்படி பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த நகரத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வர இருக்கிறது புதிய கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் கடவுள் சிவனின் திரிசூலம் மற்றும் பிறை நிலா வடிவில் கட்டமைக்கப்பட இருக்கிறது.
வாரணாசி மைதானம் அடிக்கல் நாட்டு விழா
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புதியதாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக அம்மாநில அரசு 121 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. மொத்தம் 31 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் பிரம்மாண்டமாக கட்டப்பட இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சுமார் 2 ஆண்டுகளில் இந்த மைதானம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய இந்தியா... 4 பேர் அரைசதம் - அடங்கியது ஆஸ்திரேலியா!
மைதானத்தின் கட்டமைப்பு
மைதானம் முழுவதும் கடவுள் சிவனை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட இருக்கிறது. கடவுள் சிவனை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டேடியத்துக்கான மின்விளக்கு திரிசூலம் வடிவில் அமைக்கப்பட உள்ளது. மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்து இருக்கும் கேலரியின் மேற்கூரை பிறை நிலா வடிவில் அமைக்கப்பட உள்ளது. அதோடு உடுக்கை வடிமும் இடம்பெற உள்ளது.
பிசிசிஐ நிதி ஒதுக்கீடு
பிசிசிஐ சார்பில் ரூ.331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் ரூ.451 கோடியில் வாரணாசியில் அமைய இருக்கும் புதிய கிரிக்கெட் மைதானம் உருவாகும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. மைதானத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சிகூடம், மைதான பராமரிப்பு ஆகியவை உயர் தொழில்நுட்பங்களுடன் இருக்கும். இவை மைதானத்தின் முப்பரிமாண காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஷமியின் சொத்து மதிப்பு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ