டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் நிலையில், நியூயார்க் மாகாணத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் இப்போது இடிக்கப்பட உள்ளது. இந்த மைதானத்தில் தான் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - அமெரிக்கா உலக கோப்பை போட்டிகள் நடத்தன.  செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால், இப்போது இந்த மைதானம் முழுமையாக இடிக்கப்பட உள்ளது. சுமார் 106 நாட்களில் டி20 உலக கோப்பை போட்டிகாகவே நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : சூப்பர்8 சுற்றில் இந்திய அணிக்காகவே வரும் 2 டம்மி டீம்கள்..!


ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு கிரிக்கெட் மைதான பராமரிப்பாளரின் நேரடி பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட நசாவ் கவுண்டி செயற்கை கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 9 போட்டிகள் நடந்தன. இனி வரும் போட்டிகள் வேறு மைதானம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருப்பதால், இந்த மைதானத்துக்கான தேவை இல்லை. இதனையொட்டி அமெரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி முடிந்ததும், மைதானத்தை இடிப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. புல்டோசர்கள் எல்லாம் தயார் நிலையில் மைதானத்துக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது,



இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து டி20 உலக கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஒரு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனை ரோகித் சர்மா வசம்இருக்கிறது. அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிஷப் பன்ட் முதலிடத்திலும், ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் முதல் இடத்திலும் இருக்கின்றனர்.


டி20 உலக கோப்பை போட்டியை பொறுத்தவரை இந்திய அணி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதேபோல், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்களும் குரூப் 8 சுற்றில் உள்ளன. இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் குரூப்8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.  இதனால் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணிகள் இம்முறை குரூப் 8 சுற்றுக்கு அடியெடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதால், இந்த டி20 உலக கோப்பை சுவாரஸ்யமாக மாறியுள்ளது.


மேலும் படிக்க | USA vs IND: இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ