இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதல் இரண்டு போட்டியிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 


இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர்.  இதன்பின் கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார்.  இதில் 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் பூர்த்தி செய்தார். 


அவர் 9 போர்கள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடித்து ஆட முயன்ற மனீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹமிஷ் பென்னட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.


பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாடி 46 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 66 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 22 ரன்னிலும், ராஸ் டெய்லர் 12 ரன்னிலும் வெளியேறியனர். நிக்கோல்ஸ் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


103 பந்தில் 108 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் டாம் லாம் உடன் நீசம் ஜோடி சேர்ந்தார். நீசம் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் அவருக்கு துணையாக பந்துக்கு பந்து ரன்கள் சேர்த்தார். கிராண்ட் ஹோம் அரைசதம் அடிக்க நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் விளாசி அபார வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து.