இந்திய அணியில் இடம் பெறாததால் கடுப்பான இளம் வீரர்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் நிதிஷ் ராணா இடம் பெறவில்லை.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஐபிஎல் 2022-ல் ரசிகர்களை கவர்ந்த சில புதிய வீரர்களுக்கு பிசிசிஐ இந்திய அணியில் இடம் கொடுத்துள்ளது. ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்றோர் இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க | ரோகித்துக்கு விராட் கோலி அனுப்பிய மெசேஜ்
இருப்பினும், ஐபிஎல்-ல் சிறந்த விளங்கிய சில வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிதிஸ் ராணாவிற்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 361 ரன்கள் குவித்துள்ளார் நிதிஸ் ராணா. அணியில் இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்த ராணா தனது ட்விட்டர் பக்கத்தில், "விஷயங்கள் விரைவில் மாறும்" என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராணா ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார், இந்த தொடரில் 3 ஆட்டங்களில் 7, 9 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி:
கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
மேலும் படிக்க | இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள வெளிநாட்டு கேப்டன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR