தமிழக வீரர் வாய்ப்பை தட்டிப் பறித்து இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்திருக்க வேண்டிய சூழலில் உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிஆனகொரோனா பாசிட்டிவ் காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக 34 வயதான உமேஷ் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு சில பந்துகளில் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய தமிழக வீரருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த ஐபிஎல் போட்டியில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் அவரை விட சிறப்பான ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் நடராஜனை பிசிசிஐ தேர்வாளர்கள் புறக்கணித்துள்ளனர். நடராஜன் சிறப்பான ஃபார்மில் தான் இருந்தார். குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும், சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த ஐபிஎல் சீசனிலும் இவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
ஐபிஎல் 2022
ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நடராஜன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரராகவும் உயர்ந்திருக்கிறார். ஐபிஎல் 2022 சீசனில் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடராஜனுக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவர் ஜஸ்பிரித் பும்ராவின் சக பந்துவீச்சாளராக கூட மாறியிருப்பார்.
மேலும் படிக்க | உலக கோப்பை 2022-ல் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம்!
ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டம்
நடராஜனைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவர், சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது புருவத்தையும் உயர வைத்தார். இருப்பினும் இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது மீண்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
நடராஜன் ரெக்கார்டு
நடராஜன் இந்தியாவுக்காக 1 டெஸ்ட் போட்டி, 4 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 3 விக்கெட்டுகளையும், டி20யில் 7 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி வருகிறார். அதேசமயம், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ