8-வது முறையாக AusOpen பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்!
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்!
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைப்பெற்றது. ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிபோட்டியில், உலக தரவரிசை நிலை 2-ஆம் இடத்தில் உள்ள, செர்பிய டென்னிஸ் மேஸ்ட்ரோ நோவக் ஜோகோவிச் ஆஸ்திரிய டென்னிஸ் வீரர் டொமினிக் தீமை எதிர்கொண்டார். இப்போட்டியில் செர்பிய வீரர் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போட்டியை தனதாக்கினார்.
இப்போட்டியின் முதல் செட்டை ஜோஜோவிச் 6-4 என சுலபமாக வென்றார். இதையடுத்து எழுச்சி பெற்ற தியம் அடுத்த செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய தியம் 6-2 கைப்பற்றினார். மீண்டும் நான்காவது செட்டில் எழுச்சி பெற்ற ஜோகோவிச் 6-3 என வென்று பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் ஜோகோவிச்சின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இருந்தாலும் கடைசி வரை தியம் நம்பிக்கை இழக்காமல் போராடி புள்ளிகளை சேர்த்தார். ஆனால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெலிப்படுத்திய ஜோகோவிச் இறுதி செட்டை 6-4 என தனதாக்கினார்.
இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச் தனது பட்டத்தையும் வெற்றிகரமாக பாதுகாத்து, மெல்போர்ன் பூங்காவில் சாதனை படைக்கும் எட்டாவது கிராண்ட்ஸ்லாம் கிரீடத்தையும் வென்றுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கடந்த 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019 என ஜோகோவிச் 7 முறை சாம்பியன் பட்டம் வெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்கள் பட்டியலில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மீண்டும் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார்