ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிக் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான ரபேல் நடாலும் பலபறிட்சை மேற்கொண்டனர்.



போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிக் 6-3, 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று அதிக முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். அதேப்போல் இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஜோகோவிக் தனது 15-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்துகின்றார்.


அதிக முறை AusOpen பட்டத்தை வென்ற வீரர்கள்...


  • நோவக் ஜோகோவிக் - 7 முறை

  • ரோஜர் பெடரர் - 6 முறை

  • ராய் எமர்சன் - 6 முறை