Wimbledon: மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி ஜோகோவிச் 20 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்
விம்பிள்டன் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியீல் இத்தாலி வீரர் பெரேட்டினியை வீழ்த்தி சரித்திர பதிவை ஏற்படுத்திய ஜோகோவிச், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் மற்றும் பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துவிட்டார்.
லண்டன்: லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்தை கைப்பற்றினார்.
விம்பிள்டன் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியீல் இத்தாலி வீரர் பெரேட்டினியை வீழ்த்தி சரித்திர பதிவை ஏற்படுத்திய ஜோகோவிச், இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் மற்றும் பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துவிட்டார்.
மூன்று மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் இத்தாலியின் பெர்ரெட்னியை 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்ந்து விம்பிள்டன்னிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்.
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி போலந்து வீரர் ஹர்காக்சுடன் மோதி வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
முந்தைய சுற்றில் 8 முறை சாம்பியனான ரோஜர் பெடரரையே தடுமாறச் செய்த ஹர்காக்ஸ், பெரேட்டினியிடம் தோல்வியைத் தழுவினார். பெரேட்டினி 6-3, 6-0, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதி சுற்றை எட்டியுள்ள பெரேட்டினி, விம்பிள்டன் ஒற்றையரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். இறுதிப்போட்டியில் விம்பிள்டன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை அவரால் நிகழ்த்த முடியாமல் போனது.
Also Read | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR