நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் டெவோன் கான்வே செவ்வாயன்று 1,000 டெஸ்ட் ரன்களை கடந்தார், இதன் மூலம் இவ்வளவு ரன்களை அடித்த முதல் நியூஸிலாந்து பேட்டர் என்ற பெருமையை பெற்றார். கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் முதல் டெஸ்ட் போட்டியின் போது கான்வே இந்த சாதனையை நிகழ்த்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கான்வே 156 பந்துகளில் 12 பவுண்டரிகள் உட்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ​​அவரது டெஸ்ட் சாதனையானது 11 டெஸ்ட் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் 55.55 சராசரியில் 1,000 ரன்களை கடந்துள்ளார்.  மொத்தமாக மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த ஸ்கோர் 200 ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | India vs Srilanka: முக்கிய வீரரை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!


20 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் ஜான் ரீடின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.  இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் டெஸ்ட் வடிவத்தில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 1925ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை செய்தார்.  கராச்சி டெஸ்ட் போட்டியில், ​​​​இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், நியூசிலாந்து 165/0 என்ற நிலையில் இருந்தது, கான்வே (82*) மற்றும் டாம் லாதம் (78*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  



பாக்கிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் (161), ஆகா சல்மான் (103), சர்பராஸ் அகமது (86) ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசித்தனர்.  நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களாக டிம் சவுத்தி (3/69) பவுலிங்கில் அசத்தினார்.  அஜாஸ் படேல், இஷ் சோதி மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் இரண்டு விக்கெட்களை எடுத்தனர். 


மேலும் படிக்க | ஊசலில் இருந்த பாகிஸ்தான்! தூக்கி நிறுத்திய கேப்டன் பாபர் அசாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ