கிரிக்கெட்டில் எப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டியோ, அதே பரபரப்புக்கு கொஞ்சம் குறையாத ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையில் நடக்கும் ஆஷஸ் போட்டிகள். 70-வது ஆஷஸ் தொடர் கடந்த நவம்பர் 23-ம் தேதி தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-0 என முன்னிலையில் உள்ளது. இன்று 4_வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.


இந்த ஆஷஸ் தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 491 ரன்கள் (141*, 40, 6, 239, 65*) குவித்துள்ளார். அவரது சராசரி 163.66 ஆகும். இந்த வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய கேப்டன் விராத் கோலி உள்ளார்.


இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரரும் அஸ்வின் ரவிசந்தரன், ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மிதை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:  ‘‘ஒருநாள் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மற்ற அணிகள் ஸ்டீவ் ஸ்மித் உடன் உட்கார்ந்து பேச வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது ஸ்மித் இவ்வளவு ரன்கள்தான் அடிக்க வேண்டும் என்பதை இருதரப்பும் ஒத்துக்கொள்ள வேண்டும் என அவரது திறமையை பாராட்டி உள்ளார்.