BWF உலக டூர் பைனல்ஸில் இந்திய வீராங்கனை P.V.சிந்து தென் கொரிய வீராங்கனை அன்சியங்கிடம் தோல்வியுற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான BWF உலக டூர் பைனல்ஸ் நடைபெற்றது.  உலக தர வரிசையில் முன்னணி இடம் வகிப்பவர்களை கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது.  இதில் முதல் இரண்டு சுற்றுகளை வென்று சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?


அதில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி என்பவரை  21-15, 15-21 மற்றும் 21-19.என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்திற்கான இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.  அதில் தென்னாப்பிரிக்க வீராங்கனை  அன்சியங்க் என்பவருடன் கடுமையாக போராடினார்.



இருப்பினும் உலக சாம்பியனான  P.V.சிந்துவால், உலக தர வரிசை பட்டியலின் ஆறாவது இடம் வகிக்கும் அன்சியங்க் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் போனது.  இதனையடுத்து 16-21, 12-21 என்ற நேர்செட் கணக்கில் தென்னாப்பிரிக்க வீராங்கனை அன்சியங்கிடம் தோல்வியை தழுவி, இறுதியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.


ALSO READ BCCI big announcement: மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் லீக்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR