IPL 2023 Advises: ஐபிஎல் 2023 போட்டிகளில் SRHக்கு எதிரான மும்பை அணியின் வெற்றிக்குப் பிறகு, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்பான தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். இது அனைவருக்கும் ஆச்சரித்தை தந்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 18) நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் புவனேஷ்வர் குமாரை அவுட் செய்தபோது இளம் வீரர் அர்ஜுன் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை எடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற ஐபிஎல் 2023 பதிப்பின் 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) தொடர்ச்சியாக மூன்றாவது ஆட்டத்தை வென்றது.


முதலில் மட்டை வீச களம் இறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணியின் கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களையும், திலக் வர்மா  37 ரன்கள் என அதிரடி காட்ட, 5 விக்கெட்டுக்கு 192 ரன்களை அர்ஜுன் டெண்டுல்கரின் அணி எடுத்தது.


மேலும் படிக்க | Arjun Tendulkar: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?


இந்த நிலையில்193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இறுதி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது.


அப்போது முக்கியமான நேரத்தில் பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்று பெற்றது.


கேப்டன் ரோஹித் இந்த முக்கியமான கட்டத்தில், டெண்டுல்கரிடம் நம்பிக்கை வைத்து கொடுத்த பொறுப்பை அவர் சரியாக செய்துவிட்டார். சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுனின் இந்த முதல் வெற்றிப் பதிவு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.


அதில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் விகேட் கீப்பர்-பேட்டருமான ரஷித் லத்தீஃப், அர்ஜுன் இன்னும் செல்ல வேண்டிய பயணம் மிகவும் நெடியது என்று தெரிவித்தார்.  


மேலும் படிக்க | ஆர்சிபி-ஐ 2 வருஷமா பதம் பார்த்திருக்கிறது பஞ்சாப் - இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்?


தனது யூடியூப் சேனலில் அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்பான கருத்தைப் பகிர்ந்துக் கொண்ட லத்தீஃப், "அர்ஜுன் ஆரம்ப நிலையில் இருக்கிறார். அவர் நிறைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அவரது சீரமைப்பு நன்றாக இல்லை, அவரால் வேகத்தை உருவாக்க முடியாது" என்று கூறினார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஒரு நல்ல பயோமெக்கானிக்கல் ஆலோசகர் அவரை வழிநடத்தினால், அவர் தனது பந்துவீச்சில் சிறிது வேகத்தை சேர்க்கலாம். பயிற்சியளிப்பது மற்றும் ஒரு வீரரை மாற்றுவது என்பது மிகவும் நுணுக்கமான விஷயம். சச்சின் அதை தானே செய்திருக்கலாம், ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டை நம்பியிருந்தார்" என்று கூறினார்.


அர்ஜூன் தொடர்பாக மேலும் சில கருத்துக்களை தெரிவித்த லத்தீஃப், "உங்கள் தளம் வலுவாக இருக்க வேண்டும். தரையிறங்கும்போது, அவர் உள்ளே வருவதற்குப் பதிலாக வெளியே செல்கிறார். அவரது சமநிலை சரியில்லை, அது அவரது வேகத்தை பாதிக்கிறது. ஆனால் அது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மணிக்கு 135 கிமீ வேகம் வரை அவர் செல்லலாம், ஆனால் அர்ஜூன் ஒரு நல்ல பேட்டர். சில விஷயங்களில் மாற்றங்களை செய்துக் கொண்டால் இன்னும் 2-3 ஆண்டுகளில் சிறந்த வீரராக முடியும்" என்று தெரிவித்தார்.


களம் இறங்கிய 5 ஐபிஎல் போட்டிகளில் மூன்றில் வெற்றி மற்றும் இரண்டில் தோல்வி என, நேற்றைய வெற்றிக்குப் பிறகு, மும்பை அணி ஐபில் 2023 புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. களம் இறங்கிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி மற்றும் இரண்டில் தோல்வி. சனிக்கிழமை மாலை (ஏப்ரல் 22) மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை மும்பை அணி எதிர் கொள்ள்விருக்கிறது.


மேலும் படிக்க | அந்த மனசு இருக்கே... கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ரிங்கு சிங் - எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ