பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலியின் கேப்டன்சி பிரச்சனைகள் பற்றி மற்றும் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலியின் அறிவுப்பு பற்றியும், இந்திய கிரிக்கெட்டில் அதிகரித்து வரும் பதட்டங்கள் பற்றியும் பேசியுள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு ஒருநாள் போட்டி கேப்டனாக. பிசிசிஐ ரோஹித் சர்மாவை நியமித்தது பற்றி எனக்கு தெரியும் என்று கோலி கூறியிருந்தார்.  இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பட் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த விவகாரங்கள் குறித்து தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பேசிய பட், கங்குலி மற்றும் கோஹ்லியின் மாறுபட்ட அறிக்கைகள் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்பதை விளக்கினார்.  இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு கங்குலி பதிலளிக்க வேண்டும்.  ஒருபுறம் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோஹ்லியிடம் கேட்டுக் கொண்டதாக கங்குலி கூறினார். ஆனால் கோஹ்லி பிசிசிஐயில் இருந்து யாரும் தன்னிடம் இது பற்றி பேசவில்லை என்று கூறியுள்ளார். இவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன என்று கூறினார்.



ஒருநாள் தொடரில் பங்கேற்பது தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த கோஹ்லி, நான் கண்டிப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் விளையாட உள்ளது.  முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26 முதல் 30 வரை பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.  ஜோகன்னஸ்பர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 3 முதல் 7 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் ஜனவரி 11 முதல் 15 வரை நடைபெறுகிறது.  டெஸ்ட் தவிர, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது, அதே நேரத்தில் டி20 தொடர் நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


ALSO READ | நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள்தான் தீர்மானித்தார்கள் - விராட் கோலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR