ஆசிய கோப்பை தொடர், டி20 வடிவில் கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து, 50 ஓவர் வடிவில் இந்தாண்டு ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. இந்த தொடர், ஜீன் 16ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை பாகிஸ்தானில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆசிய கோப்பை 2023 தொடரை விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொதுவான இடங்களில் தொடரை நடத்த வேண்டும் எனவும் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சை கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலையில், தற்போது வரை அதற்கு என ஒரு முடிவு எட்டப்படவில்லை. 


தொடரும் பிரச்னை?


ஆசிய கோப்பை 2023 தொடரை விளையாட இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லை என்றால், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக உள்ள நஜாம் சேதி சில நாள்களுக்கு முன் இதை உறுதிசெய்த நிலையில், இதற்கு முன் அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும்போது, ரமீஸ் ராஜாவும் இதே கருத்தைதான் வெளியிப்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து, இருநாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், மூத்த வீரர்கள் வார்த்தை போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | திடீர் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியா கேப்டன்! ரசிகர்கள் அதிர்ச்சி!


அந்த வகையில், பாகிஸ்தான் மூத்த வீரர் ஜாவேத் மியான்டத் இந்த விவகாரம் குறித்து பேசிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பாகிஸ்தான் சென்று தோல்வியடைந்தால், இந்திய அணியை இந்திய மக்கள் கடுமையான நடத்துவார்கள் என்பதால்தான் அவர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள் என கூறியிருந்தார்.  மேலும், ஜாவேத் மியான்டத்,"நான் எப்போதும் சொல்லி வருகிறேன், இந்தியா இங்கு வர விரும்பவில்லை என்றால், எங்களுக்கு கவலை இல்லை. அவர்கள் நரகத்திற்கு வேண்டுமானாலும் செல்லட்டும். எங்கள் கிரிக்கெட்டை நாங்கள் விளையாடுகிறோம்.



இதுபோன்ற விஷயங்களைக் கட்டுப்படுத்துவது ஐசிசியின் வேலை. இல்லையெனில் தலைமை அமைப்பாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஐசிசி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விதி இருக்க வேண்டும், அத்தகைய அணிகள் வரவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், நீங்கள் அவர்களை நீக்க வேண்டும்.


எப்போது தீரும்?


பாகிஸ்தானில் தோல்வியடைந்தால், மக்களின் கட்டுக்கடங்காத கோபத்திற்கு ஆளோவோம் என்பது குறித்து அவர்கள் கவலைப்படுவதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய இந்தியா தயாராக இல்லை. "அவர்கள் விளையாட வேண்டும், ஏன் விளையாடுவதில்லை? பின்விளைவுகளுக்கு பயப்படுகிறார்கள்" என கூறியிருந்தார்.


ஜாவேத்தின் இந்த கருத்துக்கு இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். "அவர்கள் நகரத்திற்கு செல்ல விரும்பல்லை" என நகைச்சுவையாக ஒன்-லைனில் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணி நரகத்திற்கு செல்லட்டும் என ஜாவேத் கூறியதை அடுத்து வெங்கடேஷ் இப்பிடி தெரிவித்துள்ளார். இந்தாண்டு நடைபெறும் இருக்கும் ஆசிய கோப்பையில் மைதானம் குறித்து முடிவெடுக்க மார்ச் மாதத்ததில் ஆசிய கிரிக்கெட்  கவுன்சில் திட்டமிட்டுள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: தோனியின் பழைய ஹேர் ஸ்டைல்... முஷாரப் கூறிய அறிவுரை - என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ