பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தற்கொலைக்கு முயற்சி!
உள்ளூர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்படாததால் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இன்டர்-சிட்டி சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் தனது பயிற்சியாளரால் தேர்வு செய்யப்படாததால், சோயிப் மனச்சோர்வு காரணமாக தனது அறையில் தன்னைத்தானே அடைத்துக்கொண்டதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இன்டர்-சிட்டி இடையேயான சாம்பியன்ஷிப்பில் தனது சொந்த அணிக்கு தேர்வு செய்யப்படாததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் படிக்க | ரஞ்சி கோப்பையில் DRS பயன்படுத்த பிசிசிஐயிடம் பணமில்லை!
வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அவரது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்டர்-சிட்டி சாம்பியன்ஷிப்பிற்கான சோதனைகளில் தனது பயிற்சியாளரால் தேர்வு செய்யப்படாததால், சோயிப் மனச்சோர்வு காரணமாக தனது அறையில் தன்னைத்தானே அடைத்துக்கொண்டு இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
"நாங்கள் அவரது அறையின் குளியலறையில் அவரது மணிக்கட்டு வெட்டு மற்றும் மயக்கமடைந்த நிலையில் அவரைக் கண்டோம், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவர் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்" என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார். இதற்கு முன் பிப்ரவரி 2018-ல், கராச்சியைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் முஹம்மது ஜரியாப் நகரின் 19 வயதுக்குட்பட்ட அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் படிக்க | ரிஷப் பந்திற்கு ஆஸ்திரேலிய வீரர் கூறிய முக்கிய அறிவுரை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR