ரஞ்சி கோப்பையில் DRS பயன்படுத்த பிசிசிஐயிடம் பணமில்லை!

மும்பை மற்றும் மத்தியப் பிரதேசம் இடையே ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.    

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2022, 11:54 AM IST
  • ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
  • இந்த போட்டியில் DRS பயன்படுத்தப்படவில்லை.
  • இது வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஞ்சி கோப்பையில் DRS பயன்படுத்த பிசிசிஐயிடம் பணமில்லை! title=

மும்பை மற்றும் மத்தியப் பிரதேசம் இடையே சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் டிஆர்எஸ் வசதி இல்லாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் பவுலர் கௌரவ் யாதவ் வீசிய பந்தில் சர்ஃபராஸ் கானுக்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டபோது அம்பயர் அவுட் தரவில்லை. டிஆர்எஸ் வசதி இருந்து இருந்தால் நிச்சயம் அவுட் என்ற முடிவே வந்து இருக்கும் என்று அனைவரும் கருதினர்.  இதனால் மும்பை பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கானுக்கு மீண்டும் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.  இந்த தவறான முடிவு ரஞ்சி இறுதிப் போட்டியின் முடிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரிஷப் பந்திற்கு ஆஸ்திரேலிய வீரர் கூறிய முக்கிய அறிவுரை!

2019-20 சீசனில் ரஞ்சி கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் போது பிசிசிஐ 'லிமிடெட் டிஆர்எஸ்' மூலம் பரிசோதனை செய்தது. இந்த DRS ஹாக்-ஐ மற்றும் அல்ட்ராஎட்ஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.  ஆனால் இந்த இரண்டும் தான் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான ஒன்றாக உள்ளது.  ரஞ்சி கோப்பையில் டிஆர்எஸ் பயன்படுத்தப்படாதது குறித்து "எங்கள் நடுவர்களை நாங்கள் நம்புகிறோம்" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். "டிஆர்எஸ் பயன்படுத்துவது விலை உயர்ந்த ஒன்று, செலவுகள் கூடும், நடுவர்களை நம்ப வேண்டிய நேரம் இது. இந்தியாவின் இரண்டு சிறந்த நடுவர்கள் (கே.என். அனந்தபத்மநாபன் மற்றும் வீரேந்திர ஷர்மா) இந்த ஆட்டத்தில் நடுவர்கள். நீங்கள் இறுதிப் போட்டியில் டிஆர்எஸ் பயன்படுத்தினால், ரஞ்சி டிராபியின் லீக் கட்டத்திலும் அதை அறிமுகப்படுத்த விரும்புவீர்கள்" என்று முன்னாள் இந்திய வீரர் ஒருவர் பேசியுள்ளார்.  

drs

"அனைத்து உபகரணங்களின் வயரிங் மற்றும் டிரிஜிங் செய்வது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். ஹாக்ஐ பயன்படுத்த கூடுதல் கேமராக்கள் தேவை. ரஞ்சி குறைந்த உபகரணங்களுடன் விளையாடப்படுகிறது. எல்லா கேம்களுக்கும் இதனை பயன்படுத்த முடியாது" என்று மற்றோரு பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.  ஐபிஎல்-ன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் BCCI ரூ. 48,390 கோடியை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | இந்திய அணியில் 6 கேப்டன்கள் உள்ளனர்: பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News