ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு முறையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையும் உலகக்கோப்பை தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், கிரிக்கெட்டின் முழுமையான வடிவமாக அறியப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கும் உலகக்கோப்பை நடத்த ஐசிசி திட்டமிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையை 2019ஆம் ஆண்ட்ல் ஐசிசி தொடங்கியது. அதாவது, 2019-2021 வரை நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதில், இந்திய அணியை வீழ்த்தி, முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து வென்றது. 


இதையடுத்து, 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், ஒவ்வொரு அணிகளும் வேறு அணிகளுடன் சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளை விளையாடும். இதில், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் தலா 4 புள்ளிகளும் வழங்கப்படும். இதன் அடிப்படையில் இத்தொடருக்குப் புள்ளிப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | கேட்சை கோட்டைவிட்ட ராகுல் மற்றும் சுந்தருக்கு முட்டு கொடுக்கும் தினேஷ் கார்த்திக்


அந்த வகையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. புள்ளிகள் அடிப்படையில் இந்தியா 75 புள்ளிகளுடன் இருந்தாலும், தென்னாப்பிரிக்கா (72 புள்ளிகள்), இலங்கை ( 64 புள்ளிகள்) முன்னிலையில் இருக்க காரணம் வெற்றி சதவீதம்தான்.


வெற்றி சதவீதத்தின் அடிப்படையில்தான் அணிகள் தரவரிசையில் இடம்பெறும். எனவே, தென்னாப்பிரிக்கா 60 சதவீதத்துடனும், இலங்கை 53.33 சதவீதத்துடனும், இந்தியா 52.08 சதவீதத்துடனும் முறையே 2ஆவது, 3 ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளன.  இவையனைத்தும், அணியின் வெற்றி, தோல்வி, டிரா புள்ளிகளை வைத்து வெற்றி சதவீதம் முடிவு செய்யப்படும். 


இந்நிலையில்,  பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் 74 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ஜிம்மி ஆண்டர்சனின் அசத்தல் பந்துவீச்சால் விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி, இங்கிலாந்து வசமானது. 


இதனால், பாகிஸ்தான் அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 46.67 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.


எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற சிறப்பான வாய்ப்பை பாகிஸ்தான் அமைத்துக்கொடுத்துள்ளது. இந்தியா அடுத்து வரும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், அடுத்து ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரை 1 டெஸ்டிற்கு மேல தோல்வியடையாமல் இருந்தாலோ நிச்சயம் இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிரண்டு இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது. 


இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து உடனான தொடரில் 2 போட்டிகள் மீதம் இருப்பதால், இந்தியாவும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 


மேலும் படிக்க | IPL 2023 : ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு... வெளிநாட்டு வீரருக்கு வந்த சோதனை... ஐபிஎல்லில் பங்கேற்பது சந்தேகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ