ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை 38 ரன்களுக்கு சுருட்டி 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் பேசுகையில், “ஷார்ஜா ஆடுகளத்தில் பவர் பிளே ஆட்டத்தின்போது 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். அதனால் நாங்கள் முதலில் ஆட்டத்தின் நிலையை மதிப்பீடு செய்து பின்னர் அதற்கேற்ப விளையாடினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போது எப்போதும் ஒரு அழுத்தம் அனைத்து வீரர்களுக்கும் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மோதலுக்காக காத்திருக்கிறார்கள். 



இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உணர்வுபூர்வமானது. அனைவருக்கும் இது இறுதி போட்டி போல இருக்கும். இந்தப் போட்டியில் முடிந்தவரை சாதாரணமாக விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகமாக உள்ளது, எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளது” என்றார்.


முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானை இந்தியா தனது முதல் போட்டியில் சில நாள்களுக்கு முன்பு எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமாரும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்துவீசினர்.


மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்


குறிப்பாக காயத்திலிருந்து மீண்டிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அனல் பறந்தது. 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருக்கட்டத்தில் ஆட்டம் நெருக்கடியான நிலைக்கு செல்ல பாண்டியாவின் இன்னிங்ஸ் அணியை வெற்றிப்பெற செய்தது. பேட்டிங்கில் அவர் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata