கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி என்றாலே தனி சுவாரஸ்யம்தான். அதிலும் உலகக் கோப்பை என்றால் கேட்கவே வேண்டாம்; இந்த இரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகூட ஏதோ இறுதிப்போட்டியே நடப்பதுபோலத்தான் நடக்கும். அந்த அளவுக்குப் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இருக்காது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியிடம் ஒரு முறை கூட தோற்காமல் இருந்துவந்தது இந்திய அணி. இந்தச் சரித்திர சாதனையை கடந்த ஆண்டு நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில்தான் தகர்த்தது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்க அடுத்த உலகக் கோப்பைக்காகக் காத்திருக்கிறது இந்திய அணி.



இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 2011ஆம் ஆண்டு இந்திய அணியுடனான உலகக் கோப்பை போட்டி குறித்துக் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அரை இறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது. 



இந்நிலையில் அப்போட்டி பற்றி தற்போது கூறியுள்ள அக்தர் தான் அந்தப் போட்டியில் விளையாடி இருந்தால் சச்சினையும் சேவாக்கையும் விரைவில் அவுட் ஆக்கி இந்திய அணியை நிலைகுலைய வைத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். 


உடல் தகுதியைக் காரணம் காட்டி தனது அணி நிர்வாகம் அந்தப் போட்டியில் தன்னை விளையாட விடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர்போனவரான அக்தரின் இந்தக் கருத்தும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.


மேலும் படிக்க | Troll செய்யப்படும் இயக்குநர் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன?!



 


அக்தரைப் பொறுத்தவரை 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவரால் சச்சினை அவுட் ஆக்க முடியவில்லை. 2003ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் சச்சினை அவர் அவுட் ஆக்கினார்தான். ஆனால் சச்சின் 98 ரன்களை விளாசிய பிறகுதான் அவரது விக்கெட்டையே அக்தரால் வீழ்த்த முடிந்தது. அதே போட்டியில் விளையாடிய சேவாக்கின் விக்கெட்டையும் அக்தரால் வீழ்த்த முடியவில்லை. 


கள நிலவரம்  இப்படியிருக்க, சச்சினையும் சேவாக்கையும் தன்னால் எளிதில் அவுட் ஆக்கியிருக்க முடியும் என அக்தர் கூறுவது வீண் விளம்பரம்தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | நெல்சன் இயக்கும் ரஜினி படம்- டைட்டில் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR