Troll செய்யப்படும் இயக்குநர் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன?!

தன்னுடன் ஒப்பிட்டு இயக்குநர் நெல்சன்மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் செய்துவரும் நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 12, 2022, 01:45 PM IST
  • பீஸ்ட் தொடர்பாக இயக்குநர் நெல்சன் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டுவருகிறார்.
  • லோகேஷ் கனகராஜுடன் ஒப்பிட்டு நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள்.
  • நெல்சன் மீதான கிண்டல்கள் பற்றி லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார்.
Troll செய்யப்படும் இயக்குநர் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன?! title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நெல்சன் திலீப்குமாரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் எனலாம். 2017ஆம் ஆண்டு லோகேஷுக்கு மாநகரம் வந்த நிலையில் அதற்கு அடுத்த ஆண்டு நெல்சனுக்கு கோலமாவு கோகிலா வெளிவந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவந்த வேட்டை மன்னன் படம் ட்ராப் ஆனதால் நெல்சன் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகத் தாமதம் ஆனது.

இப்படியாக ஆரம்பித்த இவர்களது கரியரில் கார்த்தி- விஜய்- கமல் என லோகேஷ் கனகராஜ் சென்றுகொண்டிருக்க, நெல்சனோ, சிவகார்த்திகேயன் -விஜய்- ரஜினி எனும் ட்ராக்கில் சென்றுகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூலை ஒப்பிடுகையிலும் விஜய்யின் முந்தைய சில டாப் படங்கள் அளவுக்கு பீஸ்ட் செல்லவில்லை. மற்றொரு புறமோ லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், தற்போது வந்துள்ள விக்ரம் ஆகியவை நல்ல வசூல் குவித்துள்ளன.

இதையடுத்து நெல்சனை லோகேஷுடன் ஒப்பிட்டும் நெல்சனைக் கடுமையாக ட்ரால் செய்தும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சகட்டமாக, பீஸ்ட்டைக் கலாய்ப்பதைத் தாண்டி இன்னும் ஆரம்பிக்கவேபடாத ரஜினி-169 படத்தை கலாய்ப்பது வரை சென்றுவிட்டனர் நெட்டிசன்ஸ்.

இந்நிலையில், தன்னுடன் ஒப்பிட்டு நெல்சன்மீது நடத்தப்படும் இணைய ட்ரால்கள் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் மனம் திறந்துள்ளார். அதில், நெல்சன் மீதான இத்தகைய கேலிகள் தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் அவர் தனக்கு நல்ல நண்பர் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | நடிகர் அல்லு அர்ஜுன் மீது திடீர் வழக்கு- மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!

 

வெற்றி- தோல்வி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் எனத் தெரிவித்துள்ள அவர், நாளைக்கு தனக்கே கூட தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிண்டல் செய்பவர்கள் அதற்கான எல்லையை மீறிச் செய்வதைத் தவிர்க்கலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நெல்சன் பற்றிய லோகேஷ் கனகராஜின் இந்தப் பதில் தற்போது பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News