துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் போட்டியில் தோல்வியை தழுவியதற்கு பழி தீர்த்துக் கொண்டது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தபோதும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் அடுத்தடுத்து செய்த தவறுகள் போட்டியில் தோல்வியை தழுவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டது, 19 ஓவரில் 19 ரன்கள் விளாசியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்த்து கேப்டன் ரோகித் சர்மா, அந்த ஓவரை அவருக்கு வழங்கினார். ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக கள நிலவரம் இருந்தது. புவனேஷ்வர் குமாரின் ஓவரை விளாசி 19 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அணி, வெற்றிக்கு மிக அருகில் சென்றது. கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது.



மேலும் படிக்க | தோல்விக்கு காரணம் இதுதான்! இணையத்தில் குமுறும் ரசிகர்கள்!


இருப்பினும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் ஸ்லோ புல்டாஸ் மற்றும் யார்க்கர் வீசி நெருக்கடி கொடுத்தபோதும், வெற்றி இலக்கை எட்டி அசத்தியது பாகிஸ்தான் அணி. கடைசி ஓவர் மிகவும் பரபரப்பாக சென்றது. பெவிலியனில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் வீரர்கள், டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றத்துடன் ஒவ்வொரு பந்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு ரன் மற்றும் ஒரு ரன்கள் களத்தில் இருந்த வீரர்கள் எடுத்தபோது கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். கடைசியில் வெற்றி இலக்கு ரன்களை எடுத்தவுடன் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான், சதாப் கான் ஆகியோர் துள்ளிக்குதித்து வெற்றியைக் கொண்டாடினர். இந்த வீடியோவை பாகிஸ்தான் அணி, தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | CSK IPL2023: சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி; நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னணி இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ