உலக்கோப்பையில் பாகிஸ்தான் கண் வைத்திருக்கும் அந்த பிளேயர் இவர் தான்..!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15 ஆம் தேதி மோத இருக்கின்றன.
2023 உலகக் கோப்பையின் முழு அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாபெரும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இப்போது உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு வரவுள்ளது. இந்தப் போட்டியை கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போதே தங்களுக்கு சவாலாக இருக்கும் இந்திய அணியின் இளம் வீரரை எப்படி அவுட்டாக்குவது என பாகிஸ்தான் ஸ்கெட்ச் போட தொடங்கியிருக்கிறதாம்.
பாகிஸ்தான் கண் வைக்கும் அந்த வீரர்
இந்திய அணியில் இருக்கும் சுப்மான் கில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பனிங் இறங்கும் அவர் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாடிவிட்டால், அது அந்த அணிக்கு நிச்சயம் பாதகமாக அமையும். அதனால் எவ்வளவு சீக்கிரம் அவர் விக்கெட் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விக்கெட் எடுக்க பாகிஸ்தான் அணி முயலும். அதற்கேற்ப பாகிஸ்தான் அணி தங்களின் பலமான வேகப்பந்து வீச்சு தாக்குதல் படைகளை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. ஹரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தீவிர பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்களாம்.
மேலும் படிக்க | ICC World Cup 2023: வெளியானது ஒருநாள் உலககோப்பை அட்டவணை! முழு போட்டிகள் விவரம்!
அகமதாபாத்தில் சுப்மான் கில்லின் ரெக்கார்டு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் உட்பட பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கும் சுப்மான் கில்லுக்கு அந்த மைதானம் மிகவும் ராசியான மைதானம் ஆகும். இதுவரை அந்த மைதானத்தில் மட்டும் மொத்தம் 4 சதங்களை விளாசியுள்ளார். அவருக்கு பிடித்தமான மைதானமாகவும் அகமதாபாத் இருப்பதால், அந்த மைதானத்தில் பாகிஸ்தான் அணியை கம்பீரமாக எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 உலகக் கோப்பையில் இந்தியாவின் அட்டவணை
இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8, சென்னை
இந்தியா vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11, டெல்லி
இந்தியா vs பாகிஸ்தான், அக்டோபர் 15, அகமதாபாத்
இந்தியா v பங்களாதேஷ், அக்டோபர் 19, புனே
இந்தியா v நியூசிலாந்து அக்டோபர் 22 தர்மசாலா
இந்தியா vs இங்கிலாந்து, அக்டோபர் 29, லக்னோ
இந்தியா vs தகுதிச்சுற்று அணி, நவம்பர் 2, மும்பை
இந்தியா v தென் ஆப்பிரிக்கா, நவம்பர் 5, கொல்கத்தா
இந்தியா V குவாலிஃபையர் டீம், நவம்பர் 11, பெங்களூரு
உலகின் மிகப்பெரிய மைதானம்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறும். அக்டோபர் 5 ஆம் தேதி இந்த உலக கோப்பையின் முதல் போட்டியும் அகமதாபாத்தில் தான் தொடங்குகிறது. கடந்த முறை உலக க்கோப்பையை வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் மொத்தம் 1,32,000 பார்வையாளர்கள் நேரில் கண்டுகளிக்கலாம்.
மேலும் படிக்க | மோதலுக்கு தயாராகும் இந்தியா-பாகிஸ்தான்! அக்டோபர் 15ம் தேதி காத்திருக்கும் ட்விஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ