India Vs Pakistan: இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் வரையிலான 46 நாட்களுக்கு ஒருநாள் உலகக் கோப்பையின் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை உலகக் கோப்பை அட்டவணையை வெளியிட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி நியூசிலாந்து-இங்கிலாந்து போட்டியுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கும். இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும். போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும்.
உலகக் கோப்பை போட்டியின் பரபரப்பாக பேசப்படும் போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியாக தான் இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் இந்தியாவின் உலகக் கோப்பை தொடர் பயணம் தொடங்கும். உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா ஆடும் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
மேலும் படிக்க - ICC World Cup 2023: வெளியானது ஒருநாள் உலககோப்பை அட்டவணை! முழு போட்டிகள் விவரம்!
#SportsUpdate | நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி#WorldCup2023 | #ICCWorldCup2023 | #Cricket | #INDvsPAK | #NarendraModiStadium | #ZeeTamilNews
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/mvHpo5goDc— Zee Tamil News (@ZeeTamilNews) June 27, 2023
10 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
உலகக் கோப்பை 2023 போட்டிகள் 10 நகரங்களில் நடக்கவுள்ளது. அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), பெங்களூரு (எம்.சின்னசாமி ஸ்டேடியம்), சென்னை (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியம்), தர்மசாலா (இமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்), ஹைதராபாத் (ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், உப்பல்), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), லக்னோ (ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்), மும்பை (வான்கடே ஸ்டேடியம்) மற்றும் புனே ஸ்டேடியம்.
உலகக் கோப்பை 2023 போட்டி 46 நாட்கள் நடைபெறும்
46 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் மூன்று நாக் அவுட்கள் உட்பட 48 போட்டிகள் நடத்தப்படும். முழு உலகக் கோப்பையையும் இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. முன்னதாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணைந்து உலகப் கோப்பை தொடரை நடத்தியது.
#SportsUpdate | CWC23 - சென்னையில் இந்திய அணியின் முதல் போட்டி#WorldCup2023 | #ICCWorldCup2023 | #Cricket | #schedule | #SportsNews | #ZeeTamilNews
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/Rnewvhuab9— Zee Tamil News (@ZeeTamilNews) June 27, 2023
மேலும் படிக்க - 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வைரல் போட்டோ
10 அணிகள் பங்கேற்கின்றன
இம்முறை உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இப்போது மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்று மூலம் உலகக் கோப்பை தொடரில் தகுதி பெறும்.
உலகக் கோப்பை 2023: இந்திய அணியின் முதல் போட்டி
இந்தியா தனது போட்டியை ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. அதன் பிறகு அக்டோபர் 11 ஆம் தேதி புதுதில்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது, அதைத் தொடர்ந்து உலகமே எதிர்பார்க்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் நடைபெறும்.
மேலும் படிக்க - 2023 Cricket World Cup: தலைமை பயிற்சியாளர் தோனி! பேட்டிங் பயிற்சியாளர் சச்சின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ