இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் 50-வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியை முதல் முதலாக தொடங்கினார்.


32 வயதான முரளிவிஜய் 50-வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் வருகிற 4-ம் தேதி தொடங்கும் போட்டி அவரது 50-வது டெஸ்ட் ஆகும்.


முரளிவிஜய் 49 டெஸ்டில் (84 இன்னிங்ஸ்) 3307 ரன் எடுத்துள்ளார். சராசரி 39.84 ஆகும். 9 சதமும், 14 அரைசதமும் எடுத்துள்ளார். 2013-ம் ஆண்டு ஐதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 167 ரன் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.


50-வது டெஸ்டில் விளையாடும் 2-வது தமிழக வீரர் முரளிவிஜய் ஆவார். தமிழகத்தை சேர்ந்த எஸ்.வெங்கட்ராகவன் 57 டெஸ்டில் விளையாடி இருக்கிறார். 50-வது டெஸ்டில் விளையாடும் 30-வது இந்திய வீரர் ஆவார். 


தனது 50-வது டெஸ்டில் முரளி விஜய் விளையாட உள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் வருகிற 4-ம் தேதி நடக்கும் போட்டியை கான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.