இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின், 15ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய நகரங்களிலும் நடத்தப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, அடுத்த வருடம் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 


ஐபிஎல் தொடரில், கடந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில்,  அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மினி ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்,  வரும் சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. 


டிசம்பர் 23ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 10 அணிகளும் தங்கள் அணி தக்கவைக்கும் வீர்ரகளின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் இன்று மாலை 5 மணிக்குள் ஐபிஎல் குழுவிடம் இறுதிசெய்யவேண்டும் என கெடுவிதித்துள்ளது.


மேலும் படிக்க |  மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தல தோனி! இந்த முறை என்ன பொறுப்பு தெரியுமா?


இதனை தொடர்ந்து, யாரெல்லாம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஏலத்தில் பங்குகொள்ள போகிறார்கள் என்பது மாலை 6 மணிக்கு மேல் தெரியவந்துவிடும். இந்நிலையில், அடுத்தடுத்து ஐபிஎல் அணிகள் குறித்த தகவல்கள் குவிந்து வருகின்றன. 


அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் விடுவிக்கப்பட உள்ள 5 வீரர்களில், மேற்கு இந்திய தீவுகள் வீரர் கைரன் பொல்லார்ட்டும் ஒருவர் என கூறப்பட்டது. தற்போது, அதை உறுதிசெய்யும் வகையில் பொல்லார்ட் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 



அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளதாகவும் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். மும்பை அணயின் தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டிருந்தார்.


ஐபிஎல் தொடரில் 189 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட் 3,412 ரன்களையும், 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டில் இவரை பலத்த போட்டிகளுக்கு இடையே மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது. இதையடுத்து, மும்பை அணியின் அசைக்க முடியாத வீரராக விளங்கிய அவர், ஐந்து முறை கோப்பையை வென்ற அணயில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |  IPL 2023 Mini Auction : சிஎஸ்கே, மும்பை அணிகளின் முழு பட்டியல் - யாருக்கெல்லாம் 'குட் பை'?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ