ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நடுவர்களின் முடிவுகள் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதிய முதல் போட்டியிலேயே இந்தப் பிரச்சனை தொடங்கிவிட்டது. கடைசி ஓவரில் விராட் கோலிக்கு நோபால் கொடுக்கப்பட்டதும், ப்ரீஹிட் பந்தில் போல்டாகி கோலி ரன் எடுத்ததும் விதிமுறைக்கு மாறாக இருந்ததாக பலரும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூட, விராட் கோலிக்கு நோபால் கொடுக்கப்பட்டது 3வது நடுவரால் ரிவ்யூ செய்யப்படவில்லை ஏன்? என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | T20 world Cup: இந்தியாவை வெளியேற்றி பாகிஸ்தான் அரையிறுதி செல்ல வாய்ப்பு!


இதேபோல், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் கள நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக இணையத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வங்கதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு தவறானது என வாதிட்ட நெட்டிசன்கள், ஐசிசி துணையுடன் இந்தியாவை அரையிறுதிக்கு செல்ல வைக்க ஏற்பாடுகள் ஜோராக நடப்பதாக முன்னாள் வீரர்கள் கூட குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சோயிப் அக்தர் கூட, பிசிசிஐ-க்கு ஆதரவாக அம்பயர்கள் செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.


அதேநேரத்தில், இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படவில்லை என இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். வங்கதேசத்துகுக எதிராக தினேஷ் கார்த்திக் ரன்அவுட் செய்யப்பட்டபோது, அதனை மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையானது. இதைபோன்ற இன்னும் சில விஷயங்களை சுட்டிக்காட்டி, கள நடுவர்கள் சுதந்திரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் வீசப்பட்டது இப்போது தெரிய வந்திருக்கிறது.


இதனை கள நடுவர்கள், மூன்றாவது நடுவர் உள்ளிட்ட யாரும் கவனிக்கவில்லை.இதனை சுட்டிக்காட்டி இந்த முறை ஐசிசி நடுவர்கள் மிக மோசமாக செயல்படுவதாக சாடி வருகின்றனர். அம்பயர்கள் தங்களின் முடிவுகள் இன்னும் தெளிவாகவும், ஒருதலை பட்சம் இல்லாமலும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | T20 World cup: ஜிம்பாப்வே போட்டி மழையால் ரத்தானால் இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ