ஐபிஎல் 2022 - ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப்
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது
ஐபிஎல் 2022ன் இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் மோதின. வான்கடேவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ப்ரியம் கார்க்கும், அபிஷேக்கும் தொடக்கம் தந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே ப்ரியம் கார்க் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ராகுல் திரிபாதி களமிறங்கினார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள ஆரம்பித்த அபிஷேக்கும், திரிபாதியும் தங்களது ஆட்டத்தில் போகப்போக வேகத்தை கூட்டினர்.அந்த சமயத்தில் ஸ்வீப் அடிக்க முயன்ற திரிபாதி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் அபிஷேக்குடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய அபிஷேக் லிவிங்ஸ்டோனின் அருமையான கேட்ச்சால் 43 ரன்களுக்கு வெளியேறினார்.
பிறகு மார்க்ரமும், பூரனும் ஜோடி சேர்ந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூரன் 5 ரன்களில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து மார்க்ரமும் ரன்களில் வெளியேற ஹைதராபாத் அனியின் ரன் வேகம் குறைந்தது.
இந்த சமயத்தில் ரபாடா வீசிய 18ஆவது ஓவரில் 19 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு கிடைத்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இறுதிக்கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரும், ஷெப்பர்டும் சற்று அதிரடி காட்டினார். ஆனால் கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவானும், பேர்ஸ்டோவும் தொடக்கம் தந்தனர். பேர்ஸ்டோ ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டார்.
15 பந்துகளில் 23 ரன்களை எடுத்த அவர் ஃபரூக்கி ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய ஷாருக்கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தவானும் அதிரடி காட்ட பஞ்சாப் பவர் ப்ளே முடிவில் 62 ரன்களை எடுத்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற ஷாருக் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மயாங்க் அகர்வாலும், தவானும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் மயாங்க் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
மயாங்க்குக்கு அடுத்ததாக களமிறங்கிய லிவிங்ஸ்டோன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார்.
மேலும் படிக்க | தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் - இந்திய அணி அறிவிப்பு
தொடர்ந்து ஆடிய அவர் உம்ரான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதகளம் செய்தார். இதனால் அந்த அணி 12 ஓவர் களிலேயே 100 ரன்களைக் கடந்தது.
சிறப்பாக விளையாடிவந்த தவான் 39 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜிதேஷும் அதிரடி காட்ட பஞ்சாப்பின் சேஸிங் எளிதானது. ஆனால் எதிர்பார்க்காத சமயத்தில் ஜிதேஷ் 19 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து மான்கட் லிவிங்ஸ்டோனுடன் இணைந்தார்.
இந்த ஜோடியும் ஹைதராபாத் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது. குறிப்பாக லிவிங்ஸ்டோன் தனது அதிரடியை குறைக்காமல் ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். மேலும் அவர் அவர் இந்த ஐபிஎல்லில் 1000ஆவது சிக்ஸையும் அடித்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடி அவர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
மேலும் படிக்க | இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு யார் தகுதியானவர்?... பாண்டிங் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR