IPL 2020 News: கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா (Suresh Raina) தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார். அது பெரும் விவாதத்துக்குள்ளானது. தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணம் என செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது மாமா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து,  அவரது சொந்தக் காரணங்களுக்காக நாடு திரும்பினார்  என விளக்கம் அளித்த பின்னர் தான், விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 13 (IPL 13 Session) சீசனில் இருந்து விலக்கியதற்கான காரணத்தை அவர் ட்வீட் மூலம் தெரிவித்தார். அதில், 'பஞ்சாப்பில் வைத்து எனது மாமாவின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எனது மாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த இரவு என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், அது யார் என்பது குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். 


இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) இன் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டதை உடனடியாக விசாரணை மேற்கொள்ள முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டதை அடுத்து, சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்து விசாரணை மேற்கொண்டனர். 


ALSO READ | 



கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் சம்பந்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொலை வழக்கு விசாரணையில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு முடிந்துவிட்டதாகவும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் (Captain Amarinder Singh) புதன்கிழமை தெரிவித்தார்.