India Open 2022: இந்திய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் பிவி சிந்து தோல்வி!
2022 இந்திய ஓபன் போட்டியில் சுபனிடா கேத்தோங்கிற்கு எதிரான அரையிறுதி மோதலில் தோல்வியடைந்து போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார் பிவி சிந்து
புதுடெல்லி: கேடி ஜாதவ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் 2022ல் ஷட்லர் பிவி சிந்து சனிக்கிழமையன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியிலிருந்து தோல்வி அடைந்துவெளியேறினார்.
59 நிமிடங்கள் நீடித்த அரையிறுதி மோதலில் தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங், 14-21, 21-13, 10-21 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.
முதல் கேமில் சுபனிடா கேத்தோங் அபாரமாக ஆடினார். 26 வயதான சிந்து (PV Sindhu) எந்த வாய்ப்பும் கிடைக்காமல் திணறினார். தாய்லாந்தை சேர்ந்த சுபனிடா, முதல் கேமை 21-14 என்ற கணக்கில் வென்றார்,
அவர் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு இன்னும் ஒரோயொரு போட்டி மட்டுமே உள்ளது என்பதால் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
முதல் கேமில் சுபனிடா கேத்தோங் அபாரமாக விளையாடி, சிந்துவுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. தாய்லாந்து வீராங்கனை, முதல் கேமை 21-14 என்ற கணக்கில் வென்றார்,
அதன் பிறகு இரண்டாவது கேமில் மீண்டும் சிந்து 21-13 என வெற்றி பெற்றார், அதன் விளைவாக, போட்டி மூன்றாவது மற்றும் தீர்மானிக்கும் ஆட்டத்திற்கு முன்னேறியது. இருப்பினும், தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங் கடுமையாக போராடி, வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய ஷட்லர் லக்ஷ்யா சென் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
முன்னதாக, இந்திய ஷட்லர் லக்ஷ்யா சென் (Lakshya Sen), மலேசியாவின் Ng Tze Yong-க்கு எதிரான 3-கேம் த்ரில்லர் ஆட்டத்தில் வென்று, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
சென் அரையிறுதியில் 19-21 என்ற செட்களில் வென்றார். 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வென்ற அவர், தனது தொழில் வாழ்க்கையின் முதல் சூப்பர் 500 இறுதிப் போட்டியை எட்டினார்.
ALSO READ | INDvsSA: இந்திய அணிக்கு தொடரும் வரலாற்று சோகம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR