தினேஷ் கார்த்திகிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா? டிராவிட் பதில்
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடர் ஜூன் 9 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்திய அணியில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் படை தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்த அணியில் ஐபிஎல் தொடரில் ஜொலித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க | Naman Ojha:பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை நிதி மோசடி வழக்கில் கைது
20 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியின் அனைத்து வடிவிலான கேப்னாக இருக்கும் ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது எனத் தெரிவித்தார். அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த அவர், அப்போது தான் அவர்கள் புத்துணர்ச்சியுடனும் உடற்தகுதியுடனும் இருப்பார்கள் எனக் கூறினார்.
தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது குறித்து பேசிய ராகுல்டிராவிட், அவருக்கான பணி என்ன? என்பது தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் அவருக்கான பினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த டிராவிட், அந்த பணியே இந்திய அணியிலும் அவருக்கு உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Team India: இவர் இல்லாத இந்திய அணி வெற்றி பெறுமா?
தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறித்து பேசியபோது, சிறப்பாக விளையாடினால் வெற்றி பெறுவோம் இல்லையென்றால் கற்றுக் கொள்வோம் எனக் கூறினார். தென்னாப்பிரிக்கா தொடரை சிறப்பாக எதிர்கொள்ள இந்திய அணி ஆயத்தமாகி வருவதாகவும் டிராவிட் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR