Team India: இவர் இல்லாத இந்திய அணி வெற்றி பெறுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியிருப்பதால் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2022, 07:39 PM IST
  • தென்னாப்பிரிக்கா தொடரில் விலகிய முக்கிய வீரர்
  • காயம் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்
  • அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு
Team India: இவர் இல்லாத இந்திய அணி வெற்றி பெறுமா? title=

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் படை களமிறங்குகிறது. கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக், தீபக்ஹூடா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ஆனால், அணியை தனி ஒருவராக மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைக்கும் சூர்ய குமார் யாதவ் இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை.

மேலும் படிக்க | டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10,000 ரன்களை கடந்த வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால், தென்னாப்பிரிக்கா தொடரில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வப்போது காயமடையும் சூர்யகுமார் யாதவ், இதனால் முக்கியமான தொடர்களை தொடர்ந்து மிஸ் செய்து வருகிறார். 

மேலும் படிக்க | புதிய தொழில் தொடங்கிய தோனி! இனி இதில் மட்டும் கவனம் செலுத்த திட்டம்!

கடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக களமிறகிய அவர், 8 போட்டிகளில் 303 ரன்களை குவித்தார். அவர் தொடர்ந்து விளையாடி இருந்தால் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கூட இடம்பெற்றிருப்பார். துருதிஷ்டவசமாக அந்த நல்வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் ஜூன் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். விரைவில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால், இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News