Naman Ojha:பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை நிதி மோசடி வழக்கில் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரின் தந்தை நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 7, 2022, 04:17 PM IST
  • பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கைது
  • வங்கி மேலாளராக இருந்தபோது நிதிமோசடி
  • மத்திய பிரதேச காவல்துறை அதிரடி நடவடிக்கை
Naman Ojha:பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை நிதி மோசடி வழக்கில் கைது  title=

நமன் ஓஜாவின் தந்தை மத்திய பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி மோசடி புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், கைது செய்யப்பட்டிருக்கிறார். நமன் ஓஜாவின் தந்தை பெயர் வினய் ஓஜா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஜவுல்கெடாவில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த அவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. இது தொடர்பான புகார்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில் மத்திய பிரதேச போலீஸாரால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | என்னுடைய இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - இந்திய வீரர் கருத்து!

அவர் மீது முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஜவுல்கெடா கிளையின் மேலாளராக அபிஷேக் ரத்னம் மற்றும் வினய் ஓஜா பணியாற்றியுள்ளனர். அப்போது, போலிப் பெயர்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் கிசான் கிரெடிட் கார்டுகளை அவர்கள் உருவாக்கி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கிசான் கார்டு வைத்திருக்கும் ஒரு நபர் உயிரிழந்தபிறகும் அவரது பெயரில் பணம் வரவு வைத்து எடுத்துள்ளனர். இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு விசாரணை தீவிரமடைந்தத்து. பல போலிப் பெயர்களில் இந்த மோசடி அரங்கேறியுள்ளதும் அப்போது தெரியவந்தது. 

மோசடியில் பணத்தை எடுத்த அவர்கள் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வினய் ஓஜா உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், மத்திய பிரதேச காவல்துறை நேற்று அதிரடியா நமன் ஓஜாவின் தந்தையை கைது செய்தது. இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க | Team India: இவர் இல்லாத இந்திய அணி வெற்றி பெறுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News