பஞ்சாப் - குஜராத் அணிகளுக்கு இடையிலான 16வது லீக் போட்டி பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஓபனிங் பேட்ஸ்மேன் களமிறங்கினர். இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் இப்போட்டியிலும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’மும்பை அணி மிரட்டியது’ சிஎஸ்கே மூத்த வீரர் பகிரங்க குற்றச்சாட்டு


ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும், 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 67 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியும் சிறப்பாக விளையாடியது. ஓபனிங் இறங்கிய ஷூப்மான் கில் 59 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். 



ஐபிஎல் போட்டியில் நேற்று அறிமுகமான சாய் சுதர்சன் 35 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் எடுத்து, போட்டியின் முக்கியமான கட்டத்தில் ரன் அவுட்டானார். இதனால், குஜராத் அணி வெற்றி பெறுவதற்கு கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது திவாட்டியா ஸ்டைக்கர் என்டில் இருந்தார். ஓடியன் ஸ்மித் பந்துவீசினார்.



மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் திவாட்டியா தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். தோனி போல் கடைசி 2 பந்துகளில் சிக்சர் அடித்து அவர் அணியை வெற்றி பெற வைத்தது, திரில்லின் உட்சமாக இருந்தது. குஜராத் அணி வீரர்கள் களத்துக்கு ஓடிவந்து திவாட்டியாவை கொண்டாடினர். அவர் தொடர்ந்து 2 சிக்சர்கள் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஜஸ்தான் அணிக்காக விளையாடியபோது 2020-ல் இதேபோல் திவாட்டியா 5 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.


மேலும் படிக்க | சாஹல் விவகாரம், போதையில் இருந்த வீரர் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்; சேவாக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR