ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டங்களையும், அதிக வெற்றி பெற்ற அணியாகவும் உள்ளது. ரோஹித் சர்மா அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்த ஆண்டு தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து இருக்கும் அந்த அணி, முதல் வெற்றியை பெற போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த அணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ராபின் உத்தப்பா. சிஎஸ்கே அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் அவர், அஸ்வின் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
மேலும் படிக்க | சாஹல் விவகாரம், போதையில் இருந்த வீரர் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்; சேவாக்
குற்றச்சாட்டுகள் என்ன?
2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, வலுக்கட்டாயமாக ஆர்சிபிக்கு மாற்றப்பட்டதாக உத்தப்பா தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து ஆர்சிபி அணிக்கு செல்ல விரும்பவில்லை என தெரிவித்த அவர், அந்த நேரத்தில் டிரான்ஸ்பர் பேப்பரில் கையெழுத்திடுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தப்பா பேசும்போது, "நான் டிரான்ஸ்பர் பேப்பரில் கையெழுத்திட விரும்பவில்லை. மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஒருவர் என்னிடம், டிரான்ஸ்பர் தாள்களில் நான் கையெழுத்திடவில்லை என்றால், மும்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்தார். அது எனக்கு தனிப்பட்ட முறையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. RCB உடனான எனது முதல் சீசனில், நான் முழு மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த சீசனில் நான் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிகமுறை கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அந்த அணி மீது ராபின் உத்தப்பா வைத்துள்ள குற்றச்சாட்டு ஐபிஎல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அணிக்காக விளையாட ஏலம் எடுத்த வீரரை, அந்த அணி நிர்வாகமே மிரட்டி மற்றொரு அணிக்கு செல்லுமாறு கூறியிருப்பது ஐபிஎல்லின் இன்னொரு முகத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க | கடைசி பந்தில் பஞ்சாப்பை தீர்த்துக்கட்டிய தெவாடியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR