புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மகாராஷ்டிராவின் விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் பிரீமியர் லீக் (The Indian Premier League)  2022 தொடங்குவதற்கு முன்னதாக வந்திருக்கும் இந்த அதிர்ச்சியூட்டும் செய்தி இது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய U-19 நட்சத்திரம் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தனது வயதை திரித்துக் கூறியிருப்பதாக மஹாராஷ்டிராவின் விளையாட்டு மற்றும் இளைஞர் துறையின் ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (Board of Control for Cricket in India) பகோரியா எழுதிய கடிதத்தில், ஹங்கர்கேகரின் உண்மையான வயது தற்போது 21 என்றும், சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி யு-19 உலகத் தொடருக்கு தகுதி பெறுவதற்காக தனது வயதை திரித்துக் கூறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 



மராத்தி பத்திரிக்கை சாம்னாவில் வெளியான அறிக்கையின்படி, மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஹங்கர்கேகர், அப்பகுதியில் உள்ள டெர்னா பப்ளிக் பள்ளியில் படித்த மாணவர். அங்கு 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது அவரது பிறந்த தேதி ஜனவரி 10, 2001 இல் இருந்து நவம்பர் 10, 2002 ஆக மாற்றப்பட்டது.


மேலும் படிக்க | அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா?


அவரது பிறந்த தேதியில் ஏற்பட்ட மாற்றம், 2022 ஆம் ஆண்டு U-19 உலகக் கோப்பையில் இந்தியா U-19 அணிக்காக விளையாடுவதற்கு தகுதியுடையவராக ஹங்கர்கேகரை உருவாக்கியது, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அந்த நாடு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


பிசிசிஐக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஐஏஎஸ் அதிகாரி ராகுல் குப்தா வயது மோசடி வழக்கை விசாரித்ததாகவும், ஹங்கர்கேகரின் பிறந்த தேதி நவம்பர் 10, 2002 க்கு மாற்றப்படுவதற்கு முன்பு பள்ளிப் பதிவேடுகளில் ஜனவரி 10, 2001 என்று பட்டியலிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும் பகோரியா கூறியுள்ளார். 



“தாராஷிவ் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் குப்தா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகரின் பிறந்த தேதியை ஆய்வு செய்தார். தாராஷிவில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ராஜ்வர்தன் ஹங்கர்கேகரின் பிறந்த தேதி ஜனவரி 10, 2001 என பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவரது பிறந்த தேதி 10 நவம்பர் 2002 என்று மாற்றப்பட்டது,” என்று BCCIக்கு பகோரியா எழுதிய கடிதத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.  


மேலும் படிக்க | ஐபிஎல் 2022 ஏலத்தில் அணி மாறிய டாப் கிரிக்கெட்டர்கள்


ஹங்கர்கேகர், ஒரு வேக ஆல்-ரவுண்டர், அவரது சிறந்த வேகம் மற்றும் பந்தை நன்றாக அடிக்கும் திறனுக்காக அறியப்பட்டவர், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸால் எடுக்கப்பட்டார். மெகா ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு (INR 15 மில்லியன்) CSK வாங்கியது.


இந்த குற்றச்சாட்டு உறுதியானால், அவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம்.  மகாராஷ்டிராவின் விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையரிடம் இருந்து வாரியம் கடிதத்தைப் பெற்றுள்ளதாகவும், வழக்கை விசாரிப்பதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


"மகாராஷ்டிரா DYS-யிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இது ஒரு தீவிரமான குற்றச்சாட்டு, நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். அந்த அமைப்பை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக InsideSport ஊடகம் கூறுகிறது.


மேலும் படிக்க | ஏலத்தில் கோடிக்கணக்கில் விலை போன மேத்யூ கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகினாரா?


வயது மோசடிக்கு எதிராக பிசிசிஐ கடுமையான கொள்கையை கடைபிடிக்கிறது. மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கடந்த காலங்களில் வயது மோசடிக்காக தடை செய்யப்பட்டுள்ளனர். 
முன்னதாக, 2018 ஆம் ஆண்டு U-19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சதம் அடித்த இந்திய U-19 பேட்டர் மன்ஜோத் கல்ராவும் வயது மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவரது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர் ரஞ்சி டிராபியில் இருந்து ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


எனவே, தற்போது வயது மோசடி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது.


மேலும் படிக்க | IPL 2022 mega auction: ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR


மேலும் படிக்க | அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா?