சுப்மான் கில் பேட்டிங்கில் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த இரண்டு மாதங்களில், கில் அனைத்து கிரிக்கெட் வடிவத்தின் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் ஒருநாள் போட்டியில் அடித்த இரட்டை சதம், டி20 போட்டியில் அடித்த சதம், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அடித்த சதம் என வாழ்வின் உச்ச ஃபார்மில் உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவே அவரை இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். அவரது காதல் வாழ்க்கை குறித்து பல ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கில் சமீபத்தில் ஒப்புக்கொண்டார் என தகவல் வெளியானது. இருப்பினும், இது வைரலானதும் கில், பின்னர், அதை நிராகரித்தார்.


சமீபத்தில்,  Lakme Fashion Week 2023 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்கள் அவர் மீது ஈர்ப்பைக் கொண்டிருப்பது குறித்து ராஷ்மிகாவிடம் அப்போது, செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்சன், அவர் கில் கூறியதை அறிந்திருப்பதைக் காட்டுகிறது. அவர் பதில் ஏதும் சொல்லவிட்டாலும், அந்த ரியாக்சன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


வைரல் வீடியோ: 



மேலும் படிக்க | Rashmika Mandanna: படுகவர்ச்சியாக வந்த 'ஜிமிக்கி பொண்ணு' -ராஷ்மிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்


முன்னதாக தற்போது அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது குறித்து மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சுப்மன் கில் கூறுகையில்,"இங்கே சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இது எனது ஹோம் கிரவுண்ட். இங்கு ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சி. ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. ஆடுகளத்திற்கு வெளியே நடக்கும் எதுவும் கரடுமுரடான பகுதிக்கு அப்பால் இருந்தது. முடிந்த போதெல்லாம் சிங்கிள்ஸ் ஓட பார்த்தேன். நேர்மையாக சொல்வதானால், நான் இன்னும் பாஸிட்டிவாக இருக்க முயற்சித்தேன்.


மேலும் சிங்கிள்ஸைத் தேடிக்கொண்டிருந்தேன். அவர்கள் அவ்வளவாக தாக்கவில்லை. நாங்கள் கிட்டத்தட்ட 300 ரன்களுக்கு கீழே உள்ளோம். 4ஆவது நாளில் நாங்கள் பெரிய ஸ்கோரைப் பெறுவோம். 5ஆவது நாளில் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் உதவக்கூடும் என்று எல்லோருக்கும் தெரியும்" என்றார். முன்னதாக, சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை டேட் செய்து வருவதாக வதந்திகள் பரவின.


தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 186 ரன்களை எடுத்தார். இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலியா 3 ரன்களை மட்டும் எடுத்து, 88 ரன்கள் பின்தங்கியுள்ளது. டிராவிஸ் ஹெட், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் களத்தில் உள்ளனர். 


மேலும் படிக்க | IND vs AUS: 1205 நாட்கள் பசியை தீர்த்த விராட்... இரட்டை சதத்தை நோக்கி அடுத்த பாய்ச்சல்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ