IND vs AUS: 1205 நாட்கள் பசியை தீர்த்த விராட்... இரட்டை சதத்தை நோக்கி அடுத்த பாய்ச்சல்!

IND vs AUS, Virat Kohli Century: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சுமார் 1205 நாள்களுக்கு பின் தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 12, 2023, 03:21 PM IST
  • 4ஆவது டெஸ்ட் டிராவாகும் என எதிர்பார்ப்பு.
  • விராட் கோலி இன்னும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
  • விராட் கோலி சர்வதேச அளவில் தனது 75ஆவது சதத்தை பதிவு செய்தார்.
IND vs AUS: 1205 நாட்கள் பசியை தீர்த்த விராட்... இரட்டை சதத்தை நோக்கி அடுத்த பாய்ச்சல்! title=

IND vs AUS, Virat Kohli Century: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

ஆஸி., இன்னிங்ஸ்

அந்த அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேம்ரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாம் நாளின் மூன்றாவது செஷனில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. 

தொடக்க வீரர் ரோஹித் சர்மா 35 ரன்களுக்கும், புஜாரா 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். அவர் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விராட் கோலி அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இன்றைய நான்காம் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | IPL 2023: ரெய்னாவின் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்...! சிஎஸ்கே வீரர் இல்லை

பின்னர், களமிறங்கிய ஸ்ரீகர் பாரத், விராட் கோலி உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்ரீகர் பாரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

உச்சக்கட்ட கொண்டாட்டம்

இதையடுத்து, விராட் கோலியுடன் கூட்டு சேந்த அக்சர் படேல் ரன் வேகத்தை சற்று கூட்டினார். மேலும், விராட் கோலி சதம் அடித்து, சர்வதேச அளவில் தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். விராட் கடைசியாக 2019ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, சதம் அடித்திருந்தார். அதன்பின், சுமார் 1205 நாள்கள் கழித்து தற்போது விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இது, அவரது 75ஆவது சர்வதேச சதமாகும். 

விராட் கோலி சதத்தை ஆஸ்திரேலிய வீரர்களும் கைத்தட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பார்வையாளர்களும் கரகோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிரிக்கெட் ரசிகர்களும் இணையம் முழுவதும் விராட்டின் இந்த சதத்தை தங்களின் சாதனை போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

இந்தியா முன்னிலை

தற்போது, விராட் கோலி 150 ரன்களை கடந்த நிலையில், அக்சர் படேலும் அரைசதத்தை கடந்தார். இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று பேட்டிங்கை தொடர்ந்து வருகிறது. கடைசி போட்டி டிராவில் முடியேவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்வது சற்று கேள்விக்குள்ளாகியுள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2023: டிக்கெட் விற்பனை தொடங்கியது..! சிஎஸ்கே - குஜராத் மேட்ச் டிக்கெட் வாங்குவது எப்படி?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News