Tokyo Olympics: மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் ரவிக்குமார் தஹியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனஜெவ் (Nurislam Sanayev) என்பவரை தோற்கடித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனஜெவ் (Nurislam Sanayev) என்பவரை தோற்கடித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் இன்று காலை முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் கொலம்பிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றார் ரவிக்குமார்.
பிறகு, பல்கேரிய வீரர் ஜார்ஜி வங்கலோவ் என்பவரை 14-4 என்கிற புள்ளிக்கணிக்கில் வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார் ஹரியானாவின் 23 வயது மல்யுத்த ஜாம்பவான் ரவிக்குமார்.
சற்று நேரத்திற்கு முன் அரையிறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீரரை களம் கண்ட ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றார். இதில் ஃபால் முறையில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்கிற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார் ரவி தஹியா. இதுவரை தற்போதைய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மூன்று பதக்கங்களையும் பெற்றுத் தந்தது பெண்கள் தான்.
ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்திலுள்ள நஹ்ரி எனும் கிராமத்தில் பிறந்த ரவிக்குமார் தஹியா, விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மல்யுத்த விளையாட்டு பிரபலமாக இருக்கும் ஹரியானாவின் மைந்தனான ரவிக்குமாரின் மல்யுத்த ஆர்வத்திற்கு பெற்றோரும் ஊக்கமளித்தனர்.
ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற சத்பால் சிங் என்பவரிடம் ஆரம்பக் காலத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட ரவிக்குமார், டெல்லியின் சத்ரசால் மைதான பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டார். 2015-ல் ஜுனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2018-ல் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Also Read | Tokyo Olympic 2020: இந்தியாவுக்கு 3வது பதக்கம்; வெண்கலம் வென்றார் லவ்லினா
2019-ல் ப்ரோ ரெஸ்லிங் லீக் போட்டிகளில் ஹரியானா ஹேமர்ஸ் அணிக்காக களமிறங்கி, தான் பங்குகொண்ட போட்டிகள் அனைத்திலும் வென்று அணிக்கு பெருமை தேடி தந்தார். . 2019, 2020 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். இந்தத் தகுதிகளின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிக்குமார், 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தங்கப் பதக்கக் கனவுக்கு ஒளியூட்டியுள்ளார்.
இன்று நடைபெற்ற ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா, சீனாவின் லின் சூசனை எதிர்கொண்டார். இதில், தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் தீபக் புனியா அமெரிக்காவின் டேவிட் மோரிஸ் டெய்லர் III இடம் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார், தங்கப் பதக்கப் போட்டி பெறுவதற்கான அவரது கனவு கானல்நீரானது.
Also Read | Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR