Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?

ஒலிம்பிக் போட்டிகளில், ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆடும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கனவு கனவாகவே இருந்து விட்டது. உலக சாம்பியன் அணியான பெல்ஜியத்திடம் இந்திய ஆணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 3, 2021, 10:54 AM IST
Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?

ஒலிம்பிக் போட்டிகளில், ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆடும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கனவு கனவாகவே இருந்து விட்டது. உலக சாம்பியன் அணியான பெல்ஜியத்திடம் இந்திய ஆணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. எனினும், செவ்வாயன்று நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்திற்காக போட்டியிடும்.

போட்டியில் அதிக கோல்களை அடித்துள்ள அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ் (19 வது, 49 வது, 53 வது நிமிடங்கள்) ஹாட்ரிக் கோல்களை அடித்தார். அதே நேரத்தில் லோக் லியூபர்ட் (2 வது நிமிடம்) மற்றும் ஜான்-ஜான் டோஹ்மென் (60 வது) ஆகியோரும் கோல்களை அடித்து பெல்ஜியம் அணி இறுதிப் போட்டிக்கு செல்வதை உறுதி செய்தனர்.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் (7 வது நிமிடம்) மற்றும் மன்தீப் சிங் (8 வது) ஆகியோர் இரு கோல்களை அடித்தனர். இதற்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் (Olympic Games) இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றது.

பெல்ஜியத்தின் நான்கு கோல்கள் பெனால்டி கார்னர் மூலம் வந்தன. இந்திய அணியை பெல்ஜியம் அணி முழுமையான பதட்டத்தில் வைத்திருந்தது.

ALSO READ: Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்

எனினும், இந்திய அணிக்கு பதக்கம் வெல்ல இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. வியாழக்கிழமை நடக்கவுள்ள போட்டியில் வெண்கல பதக்கத்திற்காக போட்டியிடும்.

இதற்கிடையில், போட்டியில் தோற்றாலும், இதயங்களை இந்திய ஹாக்கி அணி வென்றிருப்பதாக பிரதமர் மோடி (PM Modi) கூறியுள்ளார். தனது ட்வீட்டின் மூலம் இந்திய ஹாக்கி அணியை பாராட்டிய மோடி, அணியின் அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன்  (Australia) போட்டியிட்ட இந்திய மகளிர் அணி, அபாரமாக ஆடி மிகச்சிறந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

ALSO READ: Tokyo Olympics: வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News