நேரம் வந்துவிட்டது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் விராத் கோஹ்லி -ரவிசாஸ்திரி
–
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் இருந்து:–
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட்கோலியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கும் கேப்டனாக்கியிருப்பேன். அனைத்து வடிவிலான ஆட்டத்திற்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று தான் யோசித்து இருப்பேன். கேப்டன் பொறுப்பை தோனியிடம் இருந்து விராட் கோலியிடம் வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்த உலக கோப்பை போட்டி 2019-ம் ஆண்டில் தான் வருகிறது. இடையில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லை. இதுவே சரியான நேரமாகும். அடுத்த உலக கோப்பை போட்டிக்கு முன்பு நமக்கு நிறைய காலம் இருப்பதால் கோஹ்லியை கேப்டனாக்கி உலகக்கோப்பைக்கு ஏற்ற வலுவான அணியை கட்டமைக்க இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
டோனி ஒரு வீரராக ஜாலியாக விளையாடட்டும். தனது விளையாட்டை எந்த வித நெருக்கடியும் இல்லாமல் அனுபவித்து விளையாட அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். டோனி ஒரு அருமையான வீரர். அவரது திறமையை யாரும் பறித்து விட முடியாது. அவரது திறமையான ஆட்டத்தை முழுமையாக ரசித்து பார்க்க அவரிடம் இருந்து கேப்டன் பதவியை எடுக்க வேண்டும். அப்போது தான் அவருக்கும் ரசித்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். கடினமான முடிவை எடுப்பது சிரமமானது தான். இருப்பினும் இந்திய கிரிக்கெட்டின் நலன் கருதி கேப்டன் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது அவசியமானதாகும் இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.