India vs England, 3rd Test: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்கள் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.


ராஜ்கோட் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?


இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு பெரும் அச்சுறுத்தலாகஇருக்கக்கூடும், அதேநேரத்தில் இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உண்டு.


இன்னும் ஒரு விக்கெட் தேவை


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரை ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 499 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளார். 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தனது 500வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளார். 


மேலும் படிக்க - Ravichandran Ashwin: சத்தமே இல்லாமல் அஸ்வின் செய்த ரெக்கார்டு..! 45 ஆண்டுகால சாதனை முறியடிப்பு


500+ விக்கெட் மைல்கல்லை எட்டும் அஸ்வின்


ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்த உடனேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை நிறைவு செய்வார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500-க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை படைப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. 


அத்தகைய சூழ்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.


ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை அஸ்வினின் ஆட்டம் எப்படி இருந்தது?


தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ராஜ்கோட் மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார்.


இந்த மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பவுலிங் செயல்திறன் 4/37 என உள்ளது.


மேலும் படிக்க - சேப்பாக்கத்தில் கிரிக்கெட் பார்க்கணுமா... இலவசம்... மிஸ் பண்ணாதீங்க மக்களே!


அவருக்கு அடுத்தப்படியாக இதே மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் 27.14 சராசரியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அதேபோல இங்கிலாந்து அணி வீரர் அடில் ரஷித் இங்கு ஒரே ஒரு டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அனில் கும்ப்ளேவை முந்தும் அஸ்வின் 


டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை சொந்த மண்ணில் (இந்தியா) அஸ்வினின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. அவர் 57 போட்டிகளில் விளையாடி 111 இன்னிங்ஸில் 21.27 சராசரியில் 346 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இந்திய மண்ணில் அனில் கும்ப்ளே (350) மட்டுமே அஸ்வினை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றாவது இடத்தில் ஹர்பஜன் சிங் (265) உள்ளார்.


ராஜ்கோட் டெஸ்டில் 4 விக்கெட்டுக்கு அதிகமாக கைப்பற்றுவதன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு அஸ்வின் முன்னேறுவார்.


மேலும் படிக்க - விராட் கோலி, பிசிசிஐ இடையே என்ன பிரச்சனை? எப்போது மீண்டும் திரும்புவார்?


இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டு மைல்கல்லை எட்டும் அஸ்வின்


இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டி 2012 ஆம் ஆண்டு அஸ்வின் விளையாடினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 39 இன்னிங்சில் 29.30 சராசரியில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிராக 6 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த அணிக்கு எதிராக ஒரே டெஸ்டில் 6/55 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். 


இதுவரை 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்


2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் பயணத்தை தொடங்கினார். இதுவரை அவர் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23.92 சராசரியில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 முறை 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அஸ்வினின் சிறந்த ஆட்டம் 7/59 ஆகும்.


மேலும் படிக்க - உலக கிரிக்கெட்டில் கெத்து காட்டும் பும்ரா... எந்த பௌலரும் செய்யாத சாதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ