இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அஸ்வின் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சமீப ஆண்டுகளாக அஸ்வின் இடம் பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வந்த இவர் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அஷ்வின் இடத்தை பிடிக்கப்போவது சுந்தர் இல்லை! இந்த 26 வயது இளம் வீரர் தான்!


நேற்று தனது ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மேல தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். வீட்டிற்கு வந்த அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவதற்குள் ஏன் ஓய்வை அறிவித்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தார். பின்பு இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடியும் கேப்டன்சி கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறதா என்று கேள்விக்கு, "அது குறித்து என்னால் பேச முடியாது, தற்போது அது முடிந்து விட்டது. எனக்கு கேப்டன்சி கிடைக்கவில்லை என்பதற்காக எந்தவித வருத்தமும் இல்லை. நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன், கேப்டன்சி கிடைக்காமல் மனம் உடைந்து போனதைப் பார்த்து இருக்கிறேன். அவர்களைப் போல என்னால் இருக்க முடியாது" என்று பதிலளித்தார்.



ஆஸ்திரேலிய தொடரில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஓய்வை அறிவித்தீர்களா என்ற கேள்விக்கு, "என்னை பாருங்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று பதில் அளித்தார். உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, "தற்போது வரை எதுவும் இல்லை, சிறிது நாட்கள் ஓய்வெடுக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் விளையாடுவது குறித்த கேள்விக்கு, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சி. என்னால் முடிந்தவரை சென்னை அணிக்காக விளையாடுவேன். இந்திய அணியின் வீரராக அஸ்வின் முடிந்து விட்டார், ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக அஸ்வின் இன்னும் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.


மேலும் பேசிய அஸ்வின், "நான் கடைசியாக 2011 உலக கோப்பையை வென்று வீடு திரும்பிய போது இது போன்ற வரவேற்பு கிடைத்தது. இன்று வீடு திரும்பியவுடன் அமைதியாக சென்று விடலாம் என்று இருந்தேன். ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவ்வளவு தட புடலான வரவேற்பை ஏற்பாடு செய்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்தார். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 537 விக்கெட்களை எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் அவரை எழுத்தில் எடுத்துள்ளது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி இருந்தார்.


மேலும் படிக்க | அஸ்வினுக்கு கடைசி வரை கிடைக்காத கேப்டன்ஸி... ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ