இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தான் சிறுவனாக இருந்தபோது மிரட்டப்பட்ட சம்பவத்தை பகிர்ந்துள்ளார். கிரிக்பஸ் தளத்துக்கு பேட்டி கொடுத்திருக்கும் அவர், டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்  கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அஸ்வின் பேசும்போது, " எனக்கு ஒரு 14, 15 வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அப்பாவுக்கு நான் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் ஆடுவது சுத்தமாக பிடிக்காது. அதேபோல் தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருந்தாலும் நான் என் நண்பர்களோடு சேர்ந்து டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடுவேன். ஒருநாள் எங்கள் டீம் இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. அப்போது, எங்கள் அணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர் டீம் பிளேயர்கள் என்னை விளையாட வரக்கூடாது என மிரட்டினார்கள். இறுதிப் போட்டியில் விளையாடினால் கை துண்டாக்கிவிடுவேன் என்றும் மிரட்டினார்கள். அந்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.


மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபியின் மிகப்பெரிய தவறுகள்... இந்த 3 வீரர்களை கழட்டிவிட்டதால் பறிபோன சான்ஸ்


காலையில் வீட்டுக்கு ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் மேட்ச் விளையாட அழைத்து சென்றார்கள். நானும் அவர்களோடு சென்றுவிட்டேன். திடீரென அவர்கள் ஒரு கடையில் வண்டியை நிறுத்தி இட்லி - வடை எல்லாம் வாங்கி கொடுத்தார்கள். நானும் சாப்பிட்டுவிட்டு, மேட்சுக்கு டைம் ஆச்சு போலாம் என்றேன். ஆனால் அப்போது தான் அவர்களுடைய பிளான் தெரிந்தது. நீ விளையாட போகக்கூடாது என மிரட்டி அங்கேயே இருக்க வைத்துவிட்டனர். பின்னர் நானும் வீட்டுக்கு சென்றுவிட்டேன். முதலில் இதுகுறித்து பயந்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவர் திரும்ப திரும்ப கேட்டதால் உண்மையை சொல்லிவிட்டேன்." என கூறினார்.


அஸ்வின் இந்த இளமைகால ஸ்டோரி கேட்பவர்களுக்கு பதைபதைக்ககூட வைக்கலாம். இப்போது அவர் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின், வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதுவரை 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதுடன், 3309 ரன்களும் எடுத்துள்ளார்.


இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 சர்வதேச போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களும், டி20 சர்வதேச போட்டிகளில் 184 ரன்களும் எடுத்துள்ளார். 211 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 180 விக்கெட்டுகளையும் 800 ரன்களையும் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க | மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ