ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப்போட்டி தொடக்க விழா ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது. கடந்த சில தினங்களாக அணிகள் அனைத்தும் தங்கள் அணி பொருப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.


இந்நிலையில், 38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா, கடந்த நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியியில் இருந்து ஓய்வு பெற்றார். 


Watch: ஆஷிஷ் நெஹ்ரா பிரியாவிடை வீடியோ!


தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைக்குறித்து அவர் கூறுகையில், 


இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எவ்வளவு பெரிய ஃபிராண்ட் என்பது அனைவருக்கும் தெரியும். ஆர்சிபி அணி இறுதிபோட்டிக்கு மூன்று முறை சென்றுள்ளது. ஆனால் தோல்வியை தழுவி உள்ளது. இம்முறை வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.


IPL_2018: KXIP அணியின் பயிற்சியாளராக இணைந்த முன்னாள் வீரர்!


ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல ஏப்ரல் 8-ம் தேதி ஈடன் கார்டன்ஸில் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான தனது முதல் ஆட்டத்தில் தொடங்க உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.


கொல்கத்தா அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டன்