மும்பை: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 16வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற, இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், வோரா ஆகியோர் களமிறங்கினர். இவர்களால் அதிக நேரம் நிலைக்க முடியவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை சிவம் துபே (46) மற்றும் ராகுல் டெவெட்டியா (40) ரன்கள் எடுத்தன்ர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 


ALSO READ |  ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?


இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி (Virat Kohli) மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ரன் வேட்டையை தொடங்கினார். பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 47 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 72 ரன்களை எடுத்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) வெறும் 51 பந்துகளில் சதம் அடித்தார். அவர் மொத்தம் 52 பந்துகளை சந்தித்து 6 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்களை விளாசினார். இது ஐபிஎல் தொடரில் அவரின் முதல் சதமாகும். 


 



இருவரின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி, 16.3 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.


இதுவரை இந்த தொடரில் பெங்களூரு அணி பங்கேற்ற நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை அணியும் 8 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் (IPL Poit Table) முதல் இடத்தில் உள்ளது.


 



ALSO READ |  IPL 2021, CSK vs KKR: ஹாட்ரிக் வெற்றி, 18 ரன்கள் வித்தியாசத்தில் CSK அபார வெற்றி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR