ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?

இந்த வெற்றியை அடுத்து சேனை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது எனப் பாப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 22, 2021, 09:36 AM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.
  • நடப்பு சாம்பியன்கள் மும்பை அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
  • இதுவரை ஆடிய போட்டிகளில் தோல்வி அடையாத ஒரே அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2 வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?

இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் மற்றொரு விறுவிறுப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடரை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 221 என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 
பாட் கம்மின்ஸ் கடைசி மூன்று ஓவர்களில் கொல்கத்தாவை வெற்றியின் பாதையில் வைத்திருந்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு போதுமான பங்களிப்பை வழங்கவில்லை, கடைசியாக பிரசீத் கிருஷ்ணா ரன்-அவுட் ஆனதால், சென்னை அணி வெற்றி பெற்றது. ஆனால் பாட் கம்மின்ஸ் (66* நாட் அவுட்), ஆண்ட்ரே ரஸ்ஸல் (54)  இருவரும் கடைசி வரை ரசிகர்களை பரபரப்பில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் சென்னை வெற்றி பெரும் என்ற நிலையில் இருந்து, கொல்கத்தா (Kolkata Knight Rider) வெற்றி பெரும் என்ற நிலைக்கு, இருவரும் ஆட்டத்தை எடுத்துச் சென்றனர்.

முதலில் பேட்டிங் கேட்க, பிளெசிஸ் (95 நாட் அவுட்), ருதுராஜ் கெய்க்வாட் (64) ஆகியோரின் பங்களிப்புடன் சென்னை 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்தது. தொடக்க விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர்.

ALSO READ |  IPL 2021, CSK vs KKR: ஹாட்ரிக் வெற்றி, 18 ரன்கள் வித்தியாசத்தில் CSK அபார வெற்றி!

இந்த வெற்றியை அடுத்து சேனை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது எனப் பாப்போம்.

ஐபிஎல் 2021 புள்ளிகள் அட்டவணை:
இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) இப்போது நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. சி.எஸ்.கே +1.142 ரன்-ரேட்டுடன் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதுவரை ஆடிய ஆட்டங்களில் தோல்வி அடையாத ஒரே அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் ரன்-ரேட் +0.750 மற்றும் ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஆறு புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்-ரெட் அடிப்படையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதேபோல டெல்லி கேப்பிடல் அணியும் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் ரன்-ரேட் +0.426 என்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளன. நடப்பு சாம்பியன்கள் மும்பை அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. புதன்கிழமை நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி புள்ளிகள் அட்டவணையில் தங்கள் கணக்கைத் திறந்தது. அவர்கள் இப்போது ஐந்தாவது இடத்தில் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்தன.

IPL 2021 Points Table

ஆரஞ்சு நிற தொப்பி:
ஷிகர் தவான் (Shikhar Dhawan) தொடர்ந்து ஆரஞ்சு தொப்பியை அணிந்துள்ளார், ஏனெனில் அவர் நான்கு போட்டிகளில் 57.75 சராசரி என்ற அடிப்படையில் 231 ரன்களை எடுத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மூன்று ஆட்டங்களில் 176 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவ், நான்கு ஆட்டங்களில் 173 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் டு பிளெசிஸும் (Faf du Plessis) ஆட்டமிழக்காமால் 95 ரன்கள் எடுத்து பட்டியலில் 164 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். கே.கே.ஆரின் நிதீஷ் ராணா 164 ரன்கள் எடுத்துள்ளார், குறைந்த சராசரி காரணமாக அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 

IPL 2021 Orange Cap

ALSO READ |  IPL 2021: 'ஜடேஜாவின் லெவலுக்கு பந்து அவர தேடி வரும்', வைரல் ஆன தோனியின் 8 ஆண்டு பழைய ட்வீட்

ஊதா நிற தொப்பி:
ஆர்.சி.பியின் டெத் ஓவர் நிபுணர்கள் ஹர்ஷல் படேல் (Harshal Patel) மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகளுடன் ஊதா நிற தொப்பியை வைத்திருக்கிறார். கே.கே.ஆருக்கு எதிராக தீபக் சாஹர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போது 8 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

IPL 2021 Purple Cap

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News