20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது - ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட மைதானங்களில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த 2021-ல் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, இந்தமுறை கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் சொந்த மண்ணில் களமிறங்குகிறது.
மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கின் பெயரை கோஷமிட்ட ரசிகர்கள்! கையெடுத்து கும்பிட்ட முரளி விஜய்!
இந்தியாவுக்கு ஆரம்பமே அமர்களமாக போட்டி தொடங்குகிறது. தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்லாது எனத் தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, " இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும். அந்த போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும். ஏனெனில் நடப்பு சாம்பியனான அவர்களுக்கு சொந்த மண் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து மிகச்சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன்.
தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் மட்டுமே உலகத்தரம் மற்றும் கிளாஸ் நிறைந்த மேட்ச் வின்னர் வீரர்கள் நிறைந்துள்ளார்கள். அதேபோல் பாபர் அசாம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் எதிர்பாராத வகையில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது" என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்! களமிறக்குவாரா டிராவிட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ