இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு யார் தகுதியானவர்?... பாண்டிங் விளக்கம்
இந்திய அணியின் கேப்டன் குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், மும்பை அணியும் மோதின. வாழ்வா சாவா என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி மும்பையிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இதனையடுத்து சரியான நேரத்தில் ரிவ்யூ எடுக்காதது, கேட்சை விட்டது என இந்தத் தோல்விக்கும் ரிஷப் பண்ட்தான் காரணம் என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பண்ட் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “தனது தவறு காரணமாக அணிக்கு பிளே-ஆஃப் சுற்றில் இடம் கிடைக்கவில்லை என ரிஷப் உணர்கிறார். அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். கேப்டன்ஷிப் பற்றி நிறைய கற்றுக்கொள்கிறார்.
அவர் ஒரு சிறந்த கேப்டன், அவர் தனது அணியை எப்படி வழி நடத்துகிறார் என்பதை கடந்த சீசனில் நாங்கள் பார்த்தோம். சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கு நம் வழியில் செல்லாது.
மேலும் படிக்க | டெல்லியை வீழ்த்தி ஆர்சிபியை காப்பாற்றியது மும்பை
நான் இதுபோன்ற சூழ்நிலைகளை கடந்துவிட்டேன். அவரும் விரைவில் கடப்பார். விளையாட்டுக்கு பின்னால் இருந்து ரிஷப் பண்ட் நிறைய கற்றுக்கொள்வார். அவர் சிறந்த மனம் கொண்டவர்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR