ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு மற்றும் பேட்மிண்டன் ஆடவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


பி.வி.சிந்து


ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தைவான் வீராங்கனையை எதிர்த்து ஆடினார். இந்த போட்டியில் 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.


காலிறுதியில் சீன வீராங்கனை யிஹான் வாங்கை, சிந்து எதிர் கொள்கிறார். கால் இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு நடக்கிறது.


 


ஸ்ரீகாந்த்:


ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்ஜென்சன்னை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் 21-19, 21-19 என்ற நேர்செட்களில் டென்மார்க் வீரரை வீழ்த்தி கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி பெற்றார். 


காலிறுதியில் சீனாவின் டான் லின்-ஐ, இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.


 


விகாஷ் கிருஷ்ணன்:


ரியோ ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை 75 கிலோ ‛மிடில் வெயிட்' பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பெட்டெமிரை எதிர்கொண்டார். 


இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினால், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்யலாம் எனும் நம்பிக்கை இருந்த நிலையில், போட்டி தொடங்கியது முதலே பெட்டெமிரின் சராமரி குத்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விகாஷ் கிருஷ்ணன், 0-3 என்ற புள்ளி கணக்கில் மோசமான தோல்வியை தழுவினார். 


இதனையடுத்து குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது.